பெண் கல்வி முக்கியத்துவம் குறித்த தொடர் ! மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அயலி.
ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியானது ‘ அயலி ’ எனும் வலை தொடர். இதற்கு மிக மிக உயர்ந்த விமர்சனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் கூட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்தொடரில் முன்னணி நட்சத்திரங்கள் பெரிதாக இல்லை, நடித்தவர்கள் எல்லாம் முகம் தெரியாதவர்கள் தான். அது தான் கதைக்கு மிகப் பெரிய பிளஸ். நடித்தவர்கள் அனைவரும் கதாபாத்திரத்தை வாழ்ந்துள்ளனர். அங்கேயே தொடருக்கு பெரிய வெற்றி.
தொடரின் நாயகியாக தமிழ்செல்வி கதாபாத்திரத்தை அபி நட்சத்திரா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருக்கு தாயாக வரும் நடிகை அனுமோல் தன் நடிப்பால் நம்மை முழுமையாக கதைக்குள் அழைத்துச் செல்கிறார். மற்ற படி சிங்கம் புலி, நாயகியின் அப்பா, தோழிகள் என அனைவரும் தங்களது பணிகளை பக்காவாக செய்துள்ளனர்.
தொடரின் கதைக் களம்
அயலி எனும் கன்னி கழியாத தெய்வம் இருக்கும் ஊரில் வயதுக்கு வந்த பெண் பக்கத்து ஓர் நபருடன் காதலித்து ஒடிபோனதால் கோபம் கொண்டு கிராமத்தை அழித்து விட்டதாக கூறி அவர்களது தெய்வத்தை வேறு ஒரு ஊரில் வைத்து அங்கு தங்களது வாழ்வை தொடர்கின்றனர்.
மீண்டும் தனங்கது தெய்வத்தை கோபத்திற்குள் தள்ளிவிட கூடாது என்பதற்காக அவ்வூர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஓர் பெரிய முடிவை எடுக்கின்றனர். அது என்னவென்றால், பெண்கள் வயதுக்கு வந்த ஓர் ஆண்டுக்குள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். 500, 1000 ஆண்டுகள் தொடர்ந்து அதைப் பின்பற்றியும் வருகின்றனர்.
இதை அனைத்தையும் தகர்த்து மருத்துவர் ஆக வேண்டும் எனும் கதாநாயகி தமிழ்செல்வியின் போராட்டம் மற்றும் இடையே ஆணாதிக்கம் பற்றியும் கதை அமைகிறது. தொடரில் வசனங்கள் எல்லாம் நெஞ்சில் இடி விழுந்தது போல அழுத்தமாக உள்ளது. நிச்சயம் இதை அனைவரும் பார்க்க வேண்டிய ஓர் தொடர்.