சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
புதிய அமர்வு இந்த மாதம் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.