மார்ச் 9 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடக்கும் : அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலன்ட் தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்குக் தெரிவித்துள்ளார்.