தமிழர்களின் வாக்குகளை அபகரிக்க ரணில் சதி! – சஜித் அணி குற்றச்சாட்டு.
“எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுக்காக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தேவை என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன் அந்த 13 இற்குள் இருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை முதலில் நடத்த வேண்டும். நீண்ட காலமாக அந்தத் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றது.
எதிர்கால ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக – அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார். அதற்கு நாம் எதிர்ப்பு. இதற்காகத்தான் நாம் கடந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.” – என்றார்.