யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல்.

யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல்
யாழ் மாவட்ட முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று 04.09.2020 யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், தொழில்துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட வணிகள் கழகத்தினர், தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலீட்டாளர்களை ஊக்குவித்து அதன்மூலம் மாவட்டத்தில் தொழில் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதனை நோக்கமாக கொண்டு மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.