ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மத தலைவருக்கு விடுதலை!
ஈஸ்டர் தாக்குதலுக்கு தற்கொலை குண்டுதாரிகளுக்கு பயிற்சி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு , பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமின் முன்னாள் தலைவர் ரஷீத் அக்பரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷெஹான் அமரசிங்க நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்ட ரஷீத் அக்பர், வஹாபிசத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
எவ்வாறாயினும், ரஷீத் அக்பருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்த நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
நீதிமன்ற காவலில் இருந்த ரஷித் அக்பரின் வெளிநாட்டு கடவுச்சீட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.