சஜித் அணியை விட்டு வெளியேறும் வடிவேல் சுரேஷ்!

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வடிவேல் சுரேஷ் எம்.பி., ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்யவுள்ளார்.