யாழில் விபத்தில் சிக்கிய மூத்த சட்டத்தரணி றெமீடியஸ் மரணம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ். மாநகர சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த புதன்கிழமை (08) மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், தலைக்கவசம் கழன்றமையால் தலையில் பலத்த காயமடைந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.