லீக் சுற்றுக்கு முன்னேறியது பலாலி விண்மீன் வி.க
கால்பந்து மத்தியஸ்தர்களாக இருந்து மைதானத்தில் மத்தியஸ்தம் செய்து கொண்டிருந்த வேளையில் மரணமடைந்த சுன்னாகத்தினைச் சேர்ந்த ஐயாக்குட்டி செல்வராசா மற்றும் இணுவிலைச் சேர்ந்த அப்புத்துரை தம்பிராஜா ஆகிய இருவர்களினதும் ஞாபகர்த்தமாக வலிகாமம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் அணிக்கு 7பேர் பங்கு பற்றும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் பலாலி விண்மீன்
விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.
வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் முன்றாவது ஆட்டத்தில்
புங்குடு தீவு சண்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பலாலி விண்மீன்
விளையாட்டுக் கழக அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் . பலாலி விண்மீன் விளையாட்டுக் கழக அணி 6 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது