ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி விஜயம்.
இன்றைய தினம் 12.02.2023 கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி பகுதியில் நெல் அறுவடை விழாவில் கலந்து கொண்டு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பன்னங்கண்டியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்ணாயக்கா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயங்க,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் போது இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் ஆகியோர் நேரடியாக ஜனாதிபதி அவர்களை சந்தித்து கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்ததுடன் தற்பொழுது நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை விவசாயிகளுக்கான உள்ளீடுகள் மற்றும் கிருமி நாசினிகள் போன்றவற்றை மானிய விலையில் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பான விடயங்களோடு தற்போதைய சூழலில் விவசாயிகள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சனையினையும் உள்ளடக்கியதான மகஜரினை கையளித்திருந்தனர்.