நெருக்கடிகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை! – எரான் எம்.பி. குற்றச்சாட்டு.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போதைய நெருக்கடியை வல்லுநர்கள் பல நெருக்கடியாக அடையாளப்படுத்துகின்றனர்.
இது திவாலான பொருளாதாரங்களுக்கு தீர்வு காணாத மற்றும் பிற நாடுகளில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நாடுகளுடன் தொடர்புடையது.
விநியோக உந்துதல் பணவீக்கம் காரணமாக உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும் அதேவேளையில் வட்டி விகிதமும் அதிகரிக்கின்றது.
நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ளத் தவறியுள்ளது.
நெருக்கடி காலங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதே நிர்வாகத்தின் வழியாக இருக்க வேண்டும். அரசு பொருளாதாரத்தை தன்னிச்சையாக நிர்வகிக்கின்றது.
ஒரு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். அதேவேளை, ஜனநாயகம் நிலவுவதை உறுதி செய்வதற்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்” – என்றார்.