5 பதக்கங்களை குவித்த மாதவன் மகன்!

நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் பாப்புலராக இருந்து வருகிறார். அவர் இயக்கி நடித்த ராக்கேட்ரி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மாதவனின் மகன் வேதாந்த் தற்போது டீனேஜில் இருந்தாலும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். அடுத்து அவர் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்.
5 பதக்கங்கள் தற்போது வேதாந்த் ஒரு போட்டியில் பங்கேற்று மொத்தம் ஐந்து பதக்கங்களை பெற்று இருக்கிறார். அதை மாதவன் மகிழ்ச்சியுடன் வெளியிட்டு இருக்கிறார்.
“கடவுளின் அருளால் 100மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டரில் தங்கம் மற்றும் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டரில் வெள்ளி பதக்கங்களை வென்று இருக்கிறார்” என மாதவன் குறிப்பிட்டு இருக்கிறார்.