யாழில் கணவனின் பிரிவு தாங்காது மனைவியும் உயிர்மாய்ப்பு!

கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது.
செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இவரது கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியைத் தொலைபேசி ஊடாக அறிந்த மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.