பிரபாகரன் இறந்துவிட்டார்! DNA ஆதாரமும் உள்ளது! நெடுமாறன் பேச்சுக்கு ராணுவம் பதில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப் போரின் போது உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டிஎன்ஏ ஆதாரம் எங்களிடம் உள்ளது. மே 18, 2009 அன்று நடந்த இறுதிப் போரில் அவர் கொல்லப்பட்டார். அன்று பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கான டிஎன்ஏ சோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்தோம். அவர்கள் தவறான செய்திகளை கொடுத்துள்ளனர்” என்றார்.
“இந்த அறிக்கையைக் கண்டு பயப்பட வேண்டாம். ஏனென்றால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை..” என பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.