பணம் தரும்வரை வாக்குச் சீட்டு அச்சடிக்க மாட்டோம் : தேர்தல் ஆணையத்திடம் , அரசு அச்சகம்!
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய தடை ஏற்பட்டுள்ளதாகவும், பணம் வழங்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படாது என அரசாங்க அச்சகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (13) தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான மதிப்பிடப்பட்ட தொகையயான சுமார் நானூற்று அறுபத்தி ஒரு மில்லியன் ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் அரசியல் கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை காரணமாக தேர்தலுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
பொருளாதாரச் சிக்கலை முன்னிறுத்தி தேர்தலை நடத்தாமல் தடுக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
தேர்தல் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பிப்ரவரி 23-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.