சிங்களத்தில் வந்த பொலிஸ் கட்டளையை ஏற்க மறுத்த சிறீதரன் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் பொலிஸ் கட்டளையை பொலிஸார் இன்று வழங்கியிருந்தனர்.
அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும், ஆகவே இந்தக் கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதைத் தமிழ் மொழியில் கொண்டு வந்து தருமாறும் கூறி அவர்களிடம் சிறீதரன் எம்.பி. மீளக் கையளித்தார்.
பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து கொடுத்தபோது நீதிமன்றத்துக்குத் தன்னை ஆஜராகுவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்க முடியுமே தவிர நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பைப் பொலிஸாரால் தனக்கு வழங்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் வினவிய போது பொலிஸார் அமைதியாக இருந்தனர்.