கிராஞ்சி வலைப்பாடு நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி வலைப்பாடு நீர் விநியோகத் திட்டம் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
858 பயனாளிகள் பயனடையும் வகையில், 228.78 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த நீர் விநியோகத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அமைச்சின் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.
இப் பிரதேசத்திற்கு குடிநீர் வசதியினை வழங்குவதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மேலும் இத் திட்டத்திற்கான நிதி அனுசரனையினை உலக வங்கி வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன்,பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் எந்திரி எஸ்.சாரங்கன், நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட முகாமையாளர் யோ.தயாபரன், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.