ஏடிஎம் மிஷின் திருடர்கள் கைது.. அதில் 4 பேர் இடதுசாரி கட்சியினர்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ATM இயந்திரத்தை எடுத்துச் சென்ற சந்தேகநபர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 24-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
ஏடிஎம் இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், அதில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் இந்த சந்தேக நபர்கள் நேரடியாக தொடர்புபட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அச்சமயத்தில், திருடப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் இலங்கையின் சக்திவாய்ந்த இடதுசாரிக் கட்சியின் தீவிர செயல்பாட்டாளர்கள் என்றும் காவல்துறை கூறுகிறது.