இரகசியமாக வந்திறங்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் செய்தது என்ன?
அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று கடந்த 14ம் திகதி இரவு இலங்கைக்கு திடீரென வந்து , திரும்பிச் சென்றனர்.
அவர்கள் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் இலங்கை வந்த விசேட தூதுக்குழுவினர் “கொழும்பு சிட்டி” ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், 15ம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்றதாகவும், அதன் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவு அலுவலகம் சென்று அங்குள்ள முக்கிய தரப்புகளோடு கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற அவர்கள், அவருடன் கலந்துரையாடியதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இந்த தூதுக்குழுவினருக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.