பாஸ்போர்ட் அலுவலக பெண் ஊழியர் மற்றும் தரகர்கள் சிலர் கைது!

ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

குடிவரவு திணைக்களத்தின் அலுவலக பெண் உதவியாளர் ஒருவர் மற்றும் மூன்று தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்குவதாக ஒருவரிடமிருந்து 42000 ரூபாவை பெற்றுள்ளனர்.

அந்த சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு 22’000 ரூபா மட்டுமே செலவாகும் எனவும் மீதி 20’000 ரூபாயை நால்வரும் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் வெளிநாட்டு கடவுச்சீட்டு அலுவலகத்தை சுற்றி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், அவ்வாறான செயல்களை தடுப்பதற்காக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுவொன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. புரோக்கர்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.