வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை 19 நாள்களுக்கு பின் உயிர் பிழைத்த அதிசயம்!
டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்து 15 நிமிடங்கள் மூழ்கிய நிலையில் கிடந்த குழந்த 19 நாள்கள் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, வீட்டில் சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில்(வாஷிங் மெஷின்) தவறி விழுந்த சுமார் 15 நிமிடங்களில் ஆன நிலையில் தாய் கண்டுபிடித்துள்ளார். பின்னர் குழந்தை மீட்கப்பட்டு, சுயநினைவின்றி, பேசமுடியாத நிலையில், குளிர் மற்றும் மூச்சுத்திணறல் சிரமத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
குழந்தை 7 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா மற்றும் வென்டிலேட்டரில் இருந்தது. பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்டு 12 நாள்கள் வார்டில் இருந்த குழந்தை, தனது தாயை அறிந்து பேசியது, இது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
இதையடுத்து மருத்துவர்கள் குழந்தை பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து 19 நாள் போராட்டத்திற்கு பின்னர் அதிசயமாக உயிர் பிழைத்த குழந்தை தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அங்கிருந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தையின் தாய் அறையை விட்டு வெளியே சென்றபோது, சலவை இயந்திரத்தின் மூடி திறந்திருந்ததால் சேரில் ஏறி குழந்தை தவறி அதில் விழுந்திருக்கலாம் என தாய் கூறியுள்ளார்.