பொலிஸ் பாதுகாப்பு இன்மையால் அச்சீட்டுப் பணிகளுக்கு இடையூறு! – காரணம் கூறுகின்றார் அரச அச்சகர்.

போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமையால், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சீட்டுப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்தார்.
தேர்தலுக்குத் தேவையான அச்சுப்பணிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு அவசியம் தேவைப்படுவதாக ஊடகங்களிடம் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாதுகாப்பான முறையில் அச்சிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்குக் குறைந்தபட்சம் 65 பொலிஸாரேனும் தேவைப்படுகின்றனர்.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாமையால், பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்தி அச்சிடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்தாலும், அச்சக சேவையாளர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை” – என்றார்.