அரசை எதிர்த்து திங்கள் கொழும்பில் போராட்டம்! – ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு.
ஐக்கிய மக்கள் சக்தி நாளைமறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலை ஒத்திவைக்கும் யானை, காகம், மொட்டு மற்றும் திசைகாட்டியின் கூட்டு உபாயங்களை ஜனநாயக ரீதியில் தோற்கடிப்போம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த எடுக்கும் முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி ஏன் ஈடுபடுவதாக இல்லை?பின்வாங்கக் காரணம் யாது?
தேர்தலைப் பிற்போட்டால் சர்வதேச ஆதரவு கிடைக்காது போகும். நாடு மேலும் பாதாளத்திலயே விழும்” – என்றார்.