13 இற்கு எதிரான பிக்குகளின் 2 ஆம் கட்டப் போராட்டம் மிகிந்தலையில் ஆரம்பம்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி மகாசங்கத்தினர் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
13 இற்கு எதிரான மகாசங்கத்தினரின் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிலையில், 2ஆவது போராட்டத்தை மிகிந்தலையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உலப்பனே சுமங்கல தேரர் உறுதிப்படுத்தினார்.
“கொழும்பில் முதல் வேட்டாகவே 13 ஆவது திருத்தச் சட்டம் கொளுத்தப்பட்டது. அடுத்தகட்ட நகர்வுகள் அதிரடியாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போதைய சூழ்நிலையில் 13 முழுமையாக அமுலாகுவதைத் தடுப்பதே எமது பிரதான நோக்கம். ஆனால் 13 முற்றாக நீக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” – என்றும் அவர் மேலும் கூறினார்.