முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவின் தலைவர் மோகனராஜன் வாகன விபத்தில் உயிரிழப்பு
விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய குணசிங்கம் மோகனராஜன் நேற்று (21) பிரான்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் ஓட்டிச் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த மோகனராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
போரின் முடிவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படாமல் பிரான்சுக்குத் தப்பிச் சென்று அரசியல் புகலிடம் தேடி அங்கு அகதியாக வாழ்ந்தார் .
இதற்கிடையில் கிறிஸ்டி அன்னா என்ற பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்துள்ளார்