நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகள் களத்தில்

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திரு அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.