தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து உலுக்கிய 6 நிலநடுக்கங்கள்- பீதியில் உறைந்த மக்கள்.
மத்திய அரசு நாடான தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 5.37 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.
4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு. 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.