மகளிர் டி20 உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன் குவிக்க தவறிய நிலையில், கடுமையாக போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.
எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடர்ந்து 7வது முறையாக உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.