பரப்புரைக் கூட்டத்தை திடீரென ஒத்திவைத்தது மொட்டு!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/02/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9.jpg)
அநுராதபுரத்தில் இன்று நடைபெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எமது கட்சியின் பிரதான தேர்தல் பிரசசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இருந்தே ஆரம்பமாகும். அந்தவகையில் இம்முறையும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று நடைபெறவிருந்த கூட்டம் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.
தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் மார்ச் 10 மற்றும் 20 ஆம் திகதிக்குள் மேற்படி கூட்டத்தை அநுராதபுரத்தில் நிச்சயம் நடத்துவோம்” – என்றார்.