உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு.
ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார்.
அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் இணைந்தார்.
செர்ஜியோ ராமோஸ்/Sergio Ramos
சர்வதேச கால்பந்தில் ஓய்வு
இந்த நிலையில் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக செர்ஜியோ ராமோஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது நாட்டை 180 முறை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்திய சிறப்புரிமை பெற்ற நபராக, உணர்ச்சியுடன் நான் வீட்டில் இருந்து தொடர்ந்து உற்சாகப்படுத்துவேன். என்னை எப்போதும் நம்பியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி!’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவரது கிளப் அணியான PSG வெளியிட்டுள்ள பதிவில், ‘தனது தேர்வின் வரலாற்றை என்றென்றும் குறிக்கும் ஒரு வீரர், ஒரு பெரிய சர்வதேச கால்பந்து வாழ்வை அமைத்தவர்’ என கூறியுள்ளது. ராமோஸின் ஓய்வு அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.