இரணைமடுவின் கீழான திருவையாறு ஏற்றுநீர்பாசன திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழான திருவையாறு ஏற்றுநீர்ப்பாசன திட்ட கமக்கார அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சூரியப்படல மின் விநியோகம் தொடர்பாகவும் திருவையாறு ஏற்றுநீர்ப்பாசன திட்டத்தினை இயக்குதல்,பராமரிப்பு தேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.