தன்னைத் தானே சுட்டு இராணுவச் சிப்பாய் உயிர்மாய்ப்பு!

இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பனாகொடை இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.