குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 எப்போது? – முதலமைச்சர் தகவல்…!
ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. நீட் தேர்விற்கு உரிய மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கின்றோம். ஆளுநரோ, மத்திய அரசோ இது வரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்னுடைய காலத்தில் நீட் தேர்வு விலக்கு பெறவேண்டும் என்பது ஆசை. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது” என்று குறிப்பிட்டார்.
திமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக தாங்கள் சொல்லவில்லை என்றும், 85 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாகவும் கூறிய அவர், “
வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டு தேவையில்லை. இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றபடும். எதிர்கட்சி தலைவர், மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கான உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும். நிதி நிலைமை ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம்.
வரும் மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படும்” என்று கூறினார்.