உயிரிழந்த யாழ் ஊடகவியலாளரின் தாயார் மற்றும் சிறிய தாய் எரிந்த நிலையில் மீட்பு!

யாழ். கருத்தோவியரும் , ஊடகவியளாலருமான எம்.பயஸின் தாயார் மற்றும் சிறிய தாயாரின் உடல்கள் எரிந்த நிலையில் சடலங்களை,யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டில் இருந்து, நேற்று (25) யாழ் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
65 வயதுடைய மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா மற்றும் யேசுதாசன் விக்ரோரியா ஆகிய இரு சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சடலங்களுக்கு அருகில் தீப்பெட்டி ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டு பெண்களும் எவ்வாறு இறந்தனர் என்பது இன்னும் தெரியவில்லை.
இரண்டு பெண்களின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தம்மால் கருத்து தெரிவிக்க முடியாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.