இத்தாலி கடலில் 58 அகதிகள், படகு விபத்தில் சிக்கி உயிரிழப்பு
இத்தாலிக்கு சட்டவிரோதமாக கடலில் பயணித்துக் கொண்டிருந்த 58 குடியேற்றவாசிகள் தெற்கு இத்தாலியின் கொந்தளிப்பான கடலில் படகு பழுதடைந்ததில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியின் உள்ளூர் செய்தி ஆதாரங்களின்படி, கப்பலில் இருந்தவர்கள் பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவிலிருந்து வந்தவர்கள் என தெரியவருகிறது.
150 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மரப் படகு, கலப்ரியாவில் உள்ள குரோடோன் என்ற கடலோர நகருக்கு அருகே உள்ள கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அருகிலுள்ள கடற்கரை ஓய்வு விடுதியின் கடற்கரையில் ஒதுங்கிய பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தகவல்களின்படி, கடலோரக் காவல்படையினரால் 80 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் நீந்தி கரையை அடைந்தவர்களாவார்கள்.
உள்ளூர் அரசாங்க அதிகாரி மெனுவேலா குர்ரா, ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், குழுவை ஏற்றிச் வந்த படகு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு துருக்கிய கடலோர நகரமான இஸ்மிரில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.