தேசிய மக்கள் சக்தி (JVP) போராட்டத்தின் போது காயமடைந்தவர் உயிரிழப்பு

நேற்று நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி போராட்டத்தின் போது காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேசிய மக்கள் சக்தி இரத்தினபுரி நிவித்திகல பகுதி வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளார்.
கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்த போராட்டத்தில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.