மார்ச் முதலாம் திகதி முழு நாடும் முடங்கும் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.
அரசுக்கு எதிராகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
“நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறை வரிக் கொள்கையை திருத்தக் கோரி நியாயமான கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்திருந்தோம். எனினும், எமது கோரிக்கைகளை அரசு நிராகரித்துள்ளது” – என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பரந்தளவிலான தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பானது, தங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரித்தமைக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளது.