வட மாகாணத்தில் முதற் தடவையாக வில் வித்தை பயிற்சி அறிமுகவிழா.
உலகலாவியரீதியில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளுக்கு தெரிவு செய்து நடாத்தப்படும் விளையாட்டு அம்பு எய்தல் விளையாட்டு ஆகும்.
தனி நபர் மற்றும் குழு என தற்போது பிரபலமாக உள்ள இந்த விளையாட்டு இலங்கை வரலாற்றில் முதன் முறையாக வடமாகாணத்தில் 04/09/2020 நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளம் என்னும் கிராமத்தில் கிளிநொச்சி விவேகானந்த மகாவித்தியாலயத்தில் கிளிநொச்சி உதவிக்கல்விப் பணிப்பாளர் முத்தையா காந்தச்செல்வன் அவர்களால் உப அதிபர் பொன்னுத்துரை பிரகலாதன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் இலட்சுமிகாந்தன் அனுராகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
தரம் 7, தரம் 8 இல் கல்வி கற்க்கும் மாணவர்கள் ஆண் பெண் இருபாலாருமாக நூற்றி ஐம்பது மாணவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை இதில் வில் வித்தை பயிற்சியாளராக பங்கு பற்றி பயிற்சி வழங்கிய இராமநாதன் இராமகிறிஸ்ணா நண்பரகள் சக மாணவர்கள் கனடாவில் வதியும் திருச்செல்வம் அன்ரனி செல்ரன் அவர்களும் பிரான்சில் வதியும் கதிர்காம தம்பி அரவிந்தன் அவர்களும் வழங்கி உதவி புரிந்திருந்தனர்
மேற்ப்படி விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளில் முன்னெடுப்பது என தீர்மானிக்கப் பட்டுள்ளது. மேலும் அடிப்படை உடற் பயிற்ச்சிகள் பாரம்பரிய சிலம்ப தமிழ் முறைப்படி வழங்கப்படும்.
வட மாகாணத்தின் சகல பாடசாலைகளிலும் பயிற்சி வழங்க தன்னால் முடியும் என இராமநாதன் இராமகிறிஸ்ணா அவர்கள் தெரிவிப்பதோடு தேவையானவர்கள் 0778803964 என்னும் தொலைபேசி ஊடாக தொடர்பை மேற்க்கொள்ள முடியும் என தெரிவித்தார்
கிளிநொச்சி மாவட்ட செயலக பொது மைதானத்தில் சகல பயிற்சிகளையும் தன்னால் ஒழுங்கு படுத்தி தர முடியும் என மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் இலட்சுமிகாந்தன் அனுராகாந்தன் இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதி கூறி இருந்தார்.