குண்டர் தடுப்பு சட்ட வழக்கு.. தமிழகம் முதலிடம்!
நாட்டில் பதியப்படும் குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆர்டிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 10 முதல் 15 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, நாளொன்றுக்கு 15 முதல் 20 வழக்குகள் ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு காவல்துறை தெரிந்தே தவறாக பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பதிவான குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2021-ல் பதியப்பட்ட குண்டர் தடுப்பு வழக்குகளில் 51.2% தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது. வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது.