தாதியிடம் சில்மிசம் செய்த ,பொலிஸ் பிரதான பரிசோதகரின் வேலை நிறுத்தம்
பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பயிற்சி தாதி ஒருவரின் மார்பகத்தை தடவியமைக்காக, அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தொடங்கொட பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (3) தெரிவித்தார்.
தொடங்கொட பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய 54 வயதான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் கையொப்பத்துடன் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி, பயணிகள் பேருந்தில் பயணித்த போது, களுத்துறை சுகாதார கல்லூரியில் பயிற்சி பெறும் தாதி ஒருவரின் மார்பகத்தை தொட்டதாக கூறியதையடுத்து,குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகரை அப் பேரூந்தில் பயணித்த பயணிகளும் , தாதியின் சகோதரர்களும் பிடித்து அளுத்கம தலைமைப் பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.
இதன்படி, சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் அளுத்கம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.