மோதி எனது நண்பர் – சொல்கிறார் டிரம்ப்
நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகள் அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதனால் இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாஷிடனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிரம்ப் “மோதி எனது சிறந்த நண்பர் என்று புகழ்ந்தார்.
மேலும் அவர் ”மோதி சிறந்த பணிகளை செய்து வருகிறார். அவ்வாறு அவர் செய்வது சுலபம் அல்ல. இந்தியா சிறந்த தலைவரையும், சிறந்த மனிதரையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, நாங்கள் ஹூஸ்டனில் ‛ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி நடத்தினோம். அது ஒரு அருமையான நிகழ்வு. எங்களுக்கு இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.