கொழும்பை பாதுகாக்க போலீசாரையும் ,இராணுவத்தையும் திடீரென அழைத்த ரணில்!
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையினால் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்று முற்பகல் 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் ஆகிய இடங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் உரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, கொழும்பில் நியமிக்கப்பட்ட பல வீதிகளை மறிப்பதில் இருந்து சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களை தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போராட்டத்தை கட்டுப்படுத்த கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய பொலிஸ் படையொன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.