பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தரின் கொலைக்கு அரசாங்கமே பொறுப்பு – வசந்த முதலிகே!
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று (07) ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு ஆளான பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இது கொலையே என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெளிவாக அறிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தினால், சபையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
தேர்தலைக் கோரி வீதிக்கு வந்து , அரசால் கொல்லப்பட்ட தோழர் நிவித்திகலவின் கொலையின் நீட்சியாகவே இந்தக் கொலை நடந்துள்ளது என்றார் வசந்த முதலிகே .
போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரும் கலகத்தடுப்பு பிரிவினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய போது கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட நுழைவு வாயிலில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார்.
லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து நுகேகொட சந்தி வரை இடம்பெற்ற அமைதிப் பேரணியின் போது கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பல்கலைக்கழக வாயிலை உடைத்து தாக்குதல் நடத்தியதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் கைகளில் பெரிய தடிகள் இருந்ததாகவும், தாக்குதல் மற்றும் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதும் அரசாங்கம் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.