ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் திட்டத்தில் அரசு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உள்ளகப் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளதாக மிகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் எதிர்வரும் 19ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், அதன் முடிவோடு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களும் மாகாண ஆணையாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, தேர்தலுக்கு பணம் ஒதுக்குவது கடினம் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நாட்டின் நிதி நிலைமை காரணமாக, அதற்கான விதிமுறைகள் வெளியிடப்படாததால், மீண்டும் தேர்தல் ஏப்ரல் 25 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான விதிகளை வெளியிட உச்ச நீதிமன்ற தீர்ப்பும் கிடைத்துள்ளது.