வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு! – தொடரும் மர்ம மரணங்கள்.
வவுனியா, பூவரசங்குளம் – மணியர்குளம் பகுதியில் நேற்றிரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மணியர்குளத்தின் அணைக்கட்டை அண்மித்த பகுதியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுகின்றது எனப் பொலிஸாருக்குப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்துள்ளன.