தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த துன்புறுத்திய முச்சக்கர சாரதிகள்
கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவனை இழந்த 35 வயதுடைய பெண் ஒருவர் தனது தாயாருடன் கன்னியாகுமரியில் அருமனை என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவர் அந்த பகுதியில் செல்லும் பொழுது எல்லாம் முச்சக்கர சாரதிகள் அவரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இவ்வாறு வழக்கமாகவே இருந்த சமயத்தில் கோபமடைந்த அந்த பெண் நேற்று மதியம் வீட்டுக்கு சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தியை எடுத்து வந்து அவர்களை தாக்க முயன்றுள்ளார்.
நடந்த சம்பவம்
இதனால் ஆத்திரம் அடைந்த முச்சக்கர சாரதிகள் அந்த பெண்ணை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தகாத வார்த்தையில் பேசி அவரை துன்புறுத்தியுள்ளனர்.
இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து வீடியோ எடுத்து பொலிஸாருக்கு அனுப்பியுள்ளனர்.
அதன் பின் பொலிஸார் சம்பவ இடத்து விரைந்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர். பின்னர் தான் பொலிஸாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார்.
பொலிஸார் எடுத்த நடவடிக்கை
அந்தவகையில் சசி, வினோத், திபின், விஜயகாந்த், அரவிந்த் ஆகிய ஐந்து பேர் மீது, பெண்ணை தடுத்து நிறுத்தியது, தகாத வார்த்தை பேசியது, அவமானப்படுத்தியது மற்றும் மிரட்டியதாக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.