அரசின் தாக்குதல்களுக்கு எதிராக நாடாளுமன்றில் சஜித் கண்டனம்!
அரசின் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் மற்றும் மிருகத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் எழுப்பினார்.
“கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான மற்றும் பரிதாபகரமான நிலை” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சபையில் இன்று தெரிவித்தார்.
இது அரசின் வன்முறைத் தன்மையை வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.