சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் சூரி.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இவர் தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.