சாதியை இலங்கையர் என பதிவு செய்ய மறுத்த பதிவாளர் நாயகத்திற்கு ஒரு பாடம்
தனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் சாதியை இலங்கையர் என பதிவு செய்ய மறுத்த பதிவாளர் நாயகத்திற்கு எதிராக , சட்டத்தரணி நுவான் போபகே தாக்கல் செய்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தந்தையின் தேசியத்தை இலங்கையர் (Sri Lankan) என உள்ளடக்குவதாக பதிவாளர் நாயகம் உறுதியளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி நுவான் போபகே , தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி லஃபர் தாஹிர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனது உரிமைகளை வைத்து தனது சாதியை தான் விரும்பியபடி பதிவிட அனுமதிக்குமாறு வேண்டினார்.
மகனின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் குடியுரிமையை இலங்கையர் என ஏற்பதற்கு பதிவாளர் ஜெனரல் முன்னர் மறுத்துவிட்டதால், அவரால் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்யுமாறும், தனது மகனின் ஆவணத்தில் தந்தையின் சாதியை இலங்கையர் (Sri Lankan) என குறிப்பிட உத்தரவிடுமாறும் பதிவாளர் நாயகம் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மனு அழைக்கப்பட்ட நேரத்தில், மனுதாரரான வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று பிறப்புச் சான்றிதழில் தந்தையின் சாதியை இலங்கையர் என உள்ளிடுவதாக பதிவாளர் ஜெனரல் உறுதியளித்தார்.
அதன்படி மனு மீதான விசாரணையை முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.