கண்டி பொலிஸ் பிரிவில் நேற்றும் இன்றும் 03 கொலைகள்.
கண்டி பொலிஸ் பிரிவில் நேற்றும் (10) இன்றும் மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இன்று காலை பதிவாகியுள்ள கொலைச் சம்பவம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த தனூஷிகா மதுவந்தி என்ற 26 வயதுடைய பெண்ணே வீட்டின் முன்பகுதியில் உள்ள சேற்றில் இருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டது.
கொலையுண்ட தனூஷிகா மதுவந்தி , அலவத்துகொட, அல்லக்கடை சந்தியில் சில்லறை பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வீட்டிற்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார்.
அவரது கணவர் குலதுங்க பத்திரனாலாகே தத்சர குங்கும இளங்கரத்ன எப்போதும் குடிபோதையில் இருப்பதாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
பெண் கொலை செய்யப்பட்ட நாளாக கருதப்படும் நேற்று இரவு அவரது கணவர் மரண வீடொன்றிற்கு சென்றுள்ளதாகவும், வீட்டில் பெண் தனியாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு வந்த கணவன் மனைவி வீட்டில் இல்லாததை அறிந்து அலவத்துகொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின் படி சேற்றில் புதையுண்டிருந்த இளம் தனூஷிகா மதுவந்தியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தனூஷிகா மதுவந்தியின் கணவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரிடம் எதுவித விசாரணைகளும் நடத்தப்படல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை. இதேவேளை, இன்று மாலை தனூஷிகா மதுவந்தி மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2
இரண்டு நாட்களில் பதிவான இரண்டாவது கொலை தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு, கத்திக்குத்துச் சண்டையாக மாறியுள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
3
மூன்றாவது கொலை பேராதனை தங்கொல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மனைவியின் முறைகேடான கணவன் சட்டப்பூர்வமான கணவனை அடித்துக் கொன்றுள்ளான்.
இந்த ஜோடி சட்டப்பூர்வமாக பிரிந்து செல்லவிருந்ததாகவும், இருவரும் தனித்தனியாக வாழ திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
கொலையை செய்த 42 வயதுடைய பெண்ணின் முறைகேடான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.